Enable Javscript for better performance
ஏப். 9-ல் தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 9-ல் தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா

    By dn  |   Published on : 27th March 2014 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கிழக்கு வாயில் அம்மன் சன்னதியிலிருந்து அருள்மிகு மாரியம்மன் மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி புறப்படுகிறார்.

     பின்னர் கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதிகளில் வலம் வருகிறார். யானைக்கல்லில் இருந்து அருள்மிகு அம்மனின் பூப்பல்லக்கு வடக்குவெளிவீதிக்கு வந்து கீழவெளிவீதி வழியாக காமராஜர் சாலையை வந்தடையும். பின்னர் தெப்பக்குளம் வந்து மாரியம்மன் திருக்கோயிலில் அருள்மிகு அம்மனுக்குப் பூச்சொரிதல் பூஜை நடைபெறும்.

      பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு மாரியம்மன் பூப்பல்லக்கில் அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி வரும் நேரத்தில் பக்தர்களும், பொதுமக்களும் மலர்மாலைகளை காணிக்கையாக வழங்கலாம்.  விழாவுக்கான ஏற்பாடுகளை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai