Enable Javscript for better performance
திமுக பிரமுகர் வழக்கு: சுடுகாட்டில் குப்பைக்கழிவுகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திமுக பிரமுகர் வழக்கு: சுடுகாட்டில் குப்பைக்கழிவுகள் அகற்றம்

    Published on : 27th March 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ராமநாதபுரம் அல்லிக் கண்மாய் சுடுகாட்டில் குப்பைக்கழிவுகள் அகற்றப்பட்டன.

       ராமநாதபுரம் மாவட்ட திமுக அவைத்தலைவர் டி.கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் நகராட்சி வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள்,பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளை சூரங்கோட்டை அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

      இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, குப்பைகளை அகற்றுமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நகராட்சி நிர்வாகம் உடனடியாக செயல்படுத்தவில்லை. இதையடுத்து மனுதாரர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குப்பைகள் போடுவதை நிறுத்திய நகராட்சி நிர்வாகம் ஏற்கெனவே போடப்பட்ட குப்பைகளை அகற்றாமல் விட்டுவிட்டது. இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்ட போது, நீதிமன்றத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து நீதிபதிகள் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து சுடுகாட்டில் போடப்பட் குப்பைகள் முழுவதையும் அகற்றி அதில் செம்மண் போட்டு நகராட்சி நிர்வாகம் நிரப்பியது. இதற்கான புகைப்பட ஆதாரங்களை நகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், சுடுகாட்டில் குப்பைகளை அகற்றியதற்கு ஆணையரை பாராட்டினர். மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் சு.விசுவலிங்கம் ஆஜரானார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai