Enable Javscript for better performance
துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.1.80 கோடி தங்கம் கடத்தல்: மூவரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    துபையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் ரூ.1.80 கோடி தங்கம் கடத்தல்: மூவரிடம் விசாரணை

    Published on : 27th March 2014 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துபையிலிருந்து, இலங்கை வழியாக மதுரை வந்த விமானத்தில் சீட்டுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி 3 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      மதுரை விமான நிலையத்துக்கு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் துபையிலிருந்து இலங்கை வழியாக தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். விமானத்தை சுங்கத் துறை அதிகாரி சந்திரசேகர் சோதனை செய்தார். சோதனையில் விமானத்தின் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் சுமார் 6 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த விமானத்தில் குறிப்பிட்ட இருக்கையில் பயணித்த 3 நபர்களையும் விமான நிலையத்தின் வெளியே செல்ல விடாமல் தடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

     கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1.80 கோடி. மதுரை விமான நிலையத்தில் அதிகளவு கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கம் இதுவாகும்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், துபையிலிருந்து இந்த தங்கம் சென்னைக்கு கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. துபையில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சர்வதேச விமானமாக மதுரை வரும் இந்த விமானம், பிற்பகல் 11.30 மணிக்கு உள்ளூர் விமானமாக சென்னை செல்லும். உள்ளூர் விமானமாக சென்னை செல்லும்போது கெடுபிடிகள் குறைவாக இருக்கும் என எண்ணி கடத்தத் திட்டமிட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். துபையிலிருந்து மதுரைக்கு 9.30 மணிக்கு வந்த விமானம் பிற்பகல் 11.30 மணிக்கு பதிலாக மதியம் 2.40 மணிக்கு தாமதமாக சென்னை புறப்பட்டுச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai