Enable Javscript for better performance
தொழில்முனைவோர் பயிற்சி நிறைவுவிழா- Dinamani

சுடச்சுட

    

    மதுரை வேளாண்மைக்கல்லூரியில் நடைபெற்ற வேளாண் சார்ந்த உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் முனைவோர் ஒருமாதப்பயிற்சி நிறைவுவிழா நடைபெற்றது.

     தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, விதை உற்பத்தி, நர்சரி நிர்வாகம், பயோ பெர்டிலைசர், பயோ பூச்சிமருந்துகள், காளான் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, வேளாண் காடு வளர்ப்பு, சொட்டுநீர்ப் பாசனம், கால்நடைவளர்ப்பு, பண்ணைக் கருவிகள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சி.சின்னுசாமி தலைமை வகித்தார். மனையியல் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஜி.புஷ்பா முன்னிலை வகித்தார்.

    காந்திக் கிராம கிராமிய பல்கலைக்கழக முதல்வர் டி.செந்தில்வேல் சிறப்புரையாற்றினார். பயிற்சி தொகுப்புரையை பாக்கியாத்துசாலிகா வழங்கினார். முனைவர் கோ.பாஸ்கர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai