Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு தேர்வு: 978 பேர் எழுதவில்லை- Dinamani

சுடச்சுட

    

    தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு புதன்கிழமை தமிழ் முதல்தாளுடன் துவங்கியது. மதுரை மாவட்டத்தில், 121 தேர்வு மையங்களில் 45,951 மாணவ, மாணவியர் தேர்வெழுத அனுமதிச் சீட்டு பெற்றிருந்தனர்.

    இதில்,978 மாணவ, மாணவியர் தேர்வெழுத வரவில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி தெரிவித்தார்.முதல்முறையாக, தேர்வு காலை 9.15 மணிக்கு துவங்கியது. மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் இல.சுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி ஆகியோர் ஆய்வு நடத்தினர். மதுரை சிறைக்கைதிகள் 10 பேர் திருச்சியிலுள்ள பள்ளி ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு தேர்வெழுதினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai