Enable Javscript for better performance
பிஎப் அலுவலகத்தில் ஏப்.10-ல் குறை தீர்க்கும் நாள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பிஎப் அலுவலகத்தில் ஏப்.10-ல் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    By dn  |   Published on : 27th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை வருங்கால வைப்புநிதி (பிஎப்) மண்டல அலுவலகத்தின் ஏப்ரல் மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 10-ம் தேதி சொக்கிகுளம், டோக் பெருமாட்டி கல்லூரி சாலையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறும், என மண்டல ஆணையாளர் வி.ஷியாம்சுந்தர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்.10 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் 1952, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995, தொழிலாளர் வைப்புநிதியுடன் இணைந்த காப்புறுதித் திட்டம் 1976 ஆகியவற்றின் கீழ் வரப்பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்களும், தங்களின் குறைகளை மேற்படி அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலரிடம் மார்ச் 31-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    தபால் மூலம் தங்களின் குறைகளை பதிவு செய்ய விரும்பும் தொழிலாளர்கள் தபால் உறையின் மீது ஏப்ரல் 10-ஆம் தேதிக்கான வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் மன்றம் என எழுதி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai