Enable Javscript for better performance
லஞ்சம்: மதுரை மாநகராட்சி பெண் அலுவலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருமண உதவித்திட்டம் வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் மதுரை மாநகராட்சி பெண் அலுவலர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

      மதுரை பாலம் ஸ்டேஷன் சாலை செல்லூர் நாடார் சந்துப் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் கயல்விழி. பட்டதாரி. இவருக்கு தமிழக அரசின் திருமண நிதியுதவித் திட்டத்தில் பணம் மற்றும் 4 கிராம் தங்கம் பெறுவதற்கு மாநகராட்சியில் விண்ணப்பித்துள்ளனர். நிதி வழங்க அதிகாரிகள் ரூ.1500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தராததால் நீண்டகாலமாக விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

      இதனால், ஜீவானந்தம் மதுரை மண்டல லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளர் இசக்கி ஆனந்தனிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய்த் தாள்கள் ஜீவானந்தத்திடம் அளிக்கப்பட்டது. அந்தப் பணத்தை ஜீவானந்தம் மதுரை மாநகராட்சி 3 வது தளத்தில் உள்ள மாநகராட்சி சமூக அமைப்பாளர் மனோன்மணியிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை  துணைக் கண்காணிப்பாளர் இசக்கிஆனந்தன், ஆய்வாளர் சூர்யகலா ஆகியோர் மனோன்மணியைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai