Enable Javscript for better performance
அதிமுக புறநகர் மாவட்ட செயலர் பதவிக்கு கடும் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக புறநகர் மாவட்ட செயலர் பதவிக்கு கடும் போட்டி

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுகவின் மதுரை புறநகர் மாவட்ட செயலர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

     அதிமுகவின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு பெறப்பட்டு வருகிறது. மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு எம்பிக்கள் அன்வர்ராஜா, ரபிபெர்னாட் தலைமையிலான குழுவும், புறநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையிலான குழுவும் வேட்புமனுக்களைப் பெற்று வருகிறது.

      மதுரை மாநகர் மாவட்டச் செயலர் பதவிக்கு இதுவரை 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

      புறநகர் மாவட்டச் செயலர் பதவிக்கு புதன்கிழமை 23 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தமிழரசன் உள்ளிட்ட 4 பேர் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். இப்போதைய புறநகர் மாவட்டச் செயலரும் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.முத்துராமலிங்கம் உள்பட 3 எம்எல்ஏக்கள், புறநகர் மாவட்டச் செயலர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது என்று கட்சியினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai