Enable Javscript for better performance
அனுமதியின்றி கட்டடம்: மதுரையில் 2 பொறியியல் கல்லூரி கட்டடங்களுக்கு \\\"சீல்\\\'- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி கட்டடம்: மதுரையில் 2 பொறியியல் கல்லூரி கட்டடங்களுக்கு "சீல்'

    By மதுரை  |   Published on : 17th April 2015 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் அனுமதியின்றி கட்டிய இரு பொறியியல் கல்லூரிகளின் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் வியாழக்கிழமை "சீல்'வைத்தனர்.

     மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியும், வீரபாஞ்சான் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் முறையான அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டியுள்ளன. இதையடுத்து உள்ளுர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் பி. மரியதாசன் தலைமையிலான அதிகாரிகள் இரு கல்லூரிகளின் முதல்வர் அறை மற்றும் அலுவலக கட்டடத்துக்கு வியாழக்கிழமை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பி.மரியதாசன் கூறியது: இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் வணிகக் கட்டடம், நான்காயிரம் சதுர அடிக்கு மேல் குடியிருப்புக் கட்டடம் கட்டினால் நகர் ஊரமைப்புத்துறை மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட வரைபட அனுமதி பெற வேண்டும். உள்ளுர் திட்டக் குழும எல்லையில் மாநகராட்சி மற்றும் 355 கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அனுமதியின்றி கட்டடம் கட்டிய கல்வி நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க உள்ளூர் திட்ட குழுமத் தலைவரும் ஆட்சியருமான எல். சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆய்வு மேற்கொண்டதில் அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட 90 கல்லூரிகள் முறையாக அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு கல்லூரி நிர்வாகங்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  மதுரையில் இந்த இரண்டு தனியார் பொறிóயியல் கல்லூரிகளுக்கும் ஏற்கனவே  3 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளிக்காததால் கல்லூரிகளின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai