Enable Javscript for better performance
ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கும் கல்வி இயக்க(எஸ்.எஸ்.ஏ) ஆசிரியர் பயிற்றுநர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாற்றம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

      அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

         இதில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி 885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரியக் கூடாது என்ற செயல்முறையினை திரும்பப் பெறவேண்டும், ஜூன் 2014 இல் கட்டாய பணிமாறுதல் மூலம் வெளிமாவட்டங்களில் பணிபுரிவோருக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்குதல் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் எஸ்.கே.பாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில் வேல்குமரன், மகளிர் அணிச்செயலர் ரமணிபிரபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai