Enable Javscript for better performance
ஆரப்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை ஆரப்பாளையம்-அருள்தாஸ்புரம் தரைப்பாலத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவதால் வெள்ளிக்கிழமை (ஏப்.17) காலை முதல் போக்குவரத்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     ஆரப்பாளையம்-அருள்தாஸ்புரம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

     பணிகள் தொடங்குவதை முன்னிட்டு ஆரப்பாளையம்-அருள்தாஸ்புரம் தரைப்பால போக்குவரத்து தடை செய்யப்படுகிறது என காவல்துறை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

      ஆரப்பாளையம் தரைப்பாலம் பகுதியிலிருந்து மாற்றிவிடப்பட்டுள்ள போக்குவரத்து வழிகள் விவரம்:

    ஆரப்பாளையம் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து அருள்தாஸ்புரம் சந்திப்பு பகுதிக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் புட்டுத்தோப்பு சாலை, கர்டர்பாலம், ராஜாமில் பாலம், ரயில்வே பாலம், தத்தனேரி வழியாகச் செல்லவேண்டும்.

     ஆரப்பாளையம் பகுதியிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் பெரிய வாகனங்கள் புட்டுத்தோப்பு, மேலப்பொன்னகரம், மதுராகோட்ஸ் பாலம், சிம்மக்கல், யானைக்கல், புதுப்பாலம் வழியாகச் செல்லவேண்டும். ஆரப்பாளையத்திலிருந்து பாத்திமா கல்லூரி பகுதிக்குச் செல்லுவோர் திண்டுக்கல் பைபாஸ் சாலை, காமராஜர் பாலத்தைப் பயன்படுத்தவேண்டும்.

     அருள்தாஸ்புரம் சந்திப்பிலிருந்து ஆரப்பாளையம் செல்லும் வாகனங்கள் தத்தனேரி, பாலம் ஸ்டேசன் சாலை, ராஜாமில் பாலம், கர்டர் பாலம், ஒர்க்ஷாப் சாலை வழியாக சிம்மக்கல் வழியாகச் செல்லவேண்டும் என போக்குவரத்துப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai