Enable Javscript for better performance
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாநகர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

     கூட்டத்துக்கு மதுரை மாநகர் காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ் தலைமை வகித்தார். மாநகர் காங்கிரஸýக்கான வார்டு தலைவர்கள், பகுதிக் குழுத் தலைவர், மாவட்டச் செயலர்கள், பொதுச் செயலர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர் பதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன.

     மதுரை மாநகர் 100 வார்டுகளுக்கான பதவிக்கு மொத்தம் 250 பேர் மனுத்தாக்கல் செய்தனர். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனையும் நடைபெற்றது.

    கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோவிந்தராஜன், முருகேசன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.தெய்வநாயகம், இளைஞரணி வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai