Enable Javscript for better performance
சத்துணவுப் பணியாளர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அளவில் சத்துணவுப் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     மதுரையில் இரண்டாவது நாளாக சுமார் 400 ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை காளவாசல் சந்திப்புப் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தனர்.  உண்ணாவிரதத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எஸ். பார்வதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர். கெüரியம்மாள் வரவேற்றார். கோரிக்கையை விளக்கி செயலர் ஏ.சோலையன் பேசினார்.

      உண்ணாவிரதத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். நடராஜன் தொடங்கிவைத்துப் பேசினார். மாநிலச்  செயலர் ஆர்.நூர்ஜஹான் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பி.சந்திரபாண்டி நன்றி கூறினார். 

     வெள்ளிக்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாகவும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai