Enable Javscript for better performance
சுயதொழில் தொடங்க கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலமாகக் கடனுதவி அளிக்கப்படுகிறது.

     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

     வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டில் கடனுதவி அளிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் இத் திட்டத்தைப் பயன்படுத்தி தொழில், சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

     தகுதியுள்ளவர்கள் தேர்வுக் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடன் பெறுவதற்கு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்படும்.

     குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பொதுப் பிரிவினராக இருப்பின் 35 வயதுக்குள், சிறப்பு பிரிவினர் 45 வயதுக்குள் இருப்பது அவசியம். உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம், சேவை நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும்.

     தொழில் தொடங்க முன்வரும் தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 0452-2537621.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai