Enable Javscript for better performance
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: 56 ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: 56 ஊராட்சிகளில் தூய்மை காவலர்கள் நியமனம்

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டத்தில் 56 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்ட செயலாக்கத்துக்காக தூய்மைக் காவலர்கள் நியமனம செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து புதன்கிழமை அவர் கூறியது:

     தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மக்கள்தொகை 10 ஆயிரத்துக்கு மேல் உள்ள நகர்ப்புறத்தையொட்டிய ஊராட்சிகள், சுற்றுலா மற்றும் புனித தலங்கள், பெரிய தொழிற்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளையொட்டிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும்.

     இதன்படி மதுரை மாவட்டத்தில் 56 ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.3.08 கோடியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

      தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளில் 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் தூய்மைக் காவலராக நியமிக்கப்படுவர். மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் செயல்படும் வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு இப் பணியாளர்களைக் கண்காணிக்கும்.  இத் திட்டத்துக்கு மூன்று சக்கர வண்டிகள், பிளாஸ்டிக் கழிவுகளை நறுக்கி மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்கள், சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள், தூய்மைக் காவலர்களுக்கு மேல் சட்டை, கையுறை, அடையாள அட்டை, தொப்பி ஆகியன வழங்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai