Enable Javscript for better performance
பணி நிரந்தரம் செய்யக் கோரி  மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பணி நிரந்தரம் செய்யக் கோரி  மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி மதுரை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டு நடவடிக்கைக் குழு செயலர் போஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகையன், பாலசுப்பிரமணியன் உள்பட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்புப் பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகநயினாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

     அதன் விவரம்:

     மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர பணியிடங்களாகும். அதோடு 480 நாள்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியிருந்தால் அவர்களை சட்டப்படி பணிவரன்முறை செய்யலாம். தொழிலாளர் நீதிமன்றம் நிரந்தரம் செய்ய உத்தரவிட்டும், மாநகராட்சி நிர்வாகம் அதற்கு உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளது. தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின்படி, ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     கூட்டு நடவடிக்கைக் குழுவுடன் ஏற்கெனவே நடத்திய பேச்சுவார்த்தையின்படி, புதிய பணி நியமனங்களில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai