Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்.20-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்.20-இல் தொடக்கம்

    By மதுரை  |   Published on : 17th April 2015 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.20 ஆம் தேதி(திங்கள்கிழமை)தொடங்குகிறது.

     மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி முடிந்தது. தேர்வை 46 ஆயிரத்து 61 மாணவர்கள் எழுதினர்.

     இந்நிலையில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.20 ஆம் தேதி தொடங்கி ஏப்.25 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 4 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: மதுரை மாவட்டத்தில் 4 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.20 முதல் நடைபெறவுள்ளது. இதில் மதுரைக் கல்வி மாவட்டத்துக்கு இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. அதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் தூயமரியன்ணை மேல்நிலைப் பள்ளியிலும், மொழிப்பாடங்கள் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் திருத்தப்பட உள்ளன. இதேபோல உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என் மேல்நிலைப் பள்ளி, மேலூர் கல்வி மாவட்டத்துக்கு சர்வேயர் காலனி மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிலும் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

     முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தலைமைத் தேர்வர் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தி அதிலுள்ள நிறைகுறைகளை கண்டறிவர். இதையடுத்து ஏப்ரல் 20 ஆம் தேதி மையத்துக்கு 250 ஆசிரியர்கள் வீதம் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவர். ஏப்.25 ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைகிறது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai