Enable Javscript for better performance
மதநூலை அவமதித்ததாக புகார்: தூத்துக்குடி எஸ்பிக்கு விசாரணை மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மதநூலை அவமதித்ததாக புகார்: தூத்துக்குடி எஸ்பிக்கு விசாரணை மாற்றம்

    By மதுரை  |   Published on : 17th April 2015 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆர்ப்பாட்டத்தில் மதநூலை வீசி அவமதித்ததாகக் கூறப்படும் புகாரை ஏடிஜிபிக்கு பதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

      கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்த சி.ஸ்டீபன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இவ்வாறு உத்தரவிட்டார்.

    மனுவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் கடந்த ஜன. 21 இல் இந்துமுன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தூக்கி எறிந்ததுள்ளனர்.

      இந்த செயல் மத மோதலை தூண்டுவதாக உள்ளதால், சம்பந்தப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோரிடம் புகார்கள் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன்.

      மனுவை விசாரித்த நீதிபதி, ஏடிஜிபி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தாததால் டிஜிபி, எஸ்பி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

       இம்மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

     அப்போது, ஏடிஜிபிக்கு பதில் நெல்லை சரக டிஐஜி மேற்பார்வையில் தூத்துக்குடி எஸ்பி விசாரிக்க ஆவன செய்வதாக டிஜிபி சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்த நீதிபதி, 3 மாதங்களுக்குள் தூத்துக்குடி எஸ்பி விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai