Enable Javscript for better performance
மதுரை புதுப்பட்டியில் 67 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் மதுரை மாவடடம் புதுப்பட்டியில் 67 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

     கடந்த சில வாரங்களாக மதுரையில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியைத் தாண்டியிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழையும் பரவலாகப் பெய்துவருகிறது.

     மதுரையில் செவ்வாய், புதன்கிழமைகளில் நல்ல மழை பெய்துள்ளது. புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மதுரை 30.1, சாத்தையாறு 47, மேட்டுப்பட்டி 30, கள்ளந்திரி 22, சிட்டம்பட்டி 41, புதுப்பட்டி 67, மேலூர் 33, தனியாமங்கலம் 49, இடையபட்டி 34.2, விரகனூர் 18.3.

     மதுரை நகரில் புதன்கிழமை இரவு பலத்த மழையுடன் காற்றும் வீசியது. இதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தததால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    சகதிக்காடான சாலைகள்: மதுரை மாநகராட்சியில் ஏற்கெனவே சாலைகள் மேடு பள்ளங்களாகக் காட்சியளிக்கின்றன. இதில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கான பள்ளங்கள் மூடப்படாமலும் உள்ளன.

     தற்போது பெய்து வரும் மழையால் சாலைகளில் சகதிகள் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாநகராட்சி சாலைகளை  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai