Enable Javscript for better performance
மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா சீரமைப்பு: மேயர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா சீரமைப்பு: மேயர் அறிவுறுத்தல்

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் உள்ள பூங்காவில் செயல்படாமல் உள்ள படகுத்துறை, இசை நீருற்று போன்றவற்றை சீரமைக்க மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

     மாநகராட்சி வளாகத்தில் உள்ள சுற்றுச்சுழல் பூங்காவில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பூங்காவில் செயல்படாமல் பழுதாகி இருக்கும் இரவில் ஒளிரும் மரங்கள், இசை நீரூற்று உள்ளிட்ட வைகளை சீர்செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், படகுத்துறையை தனியார் மூலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்பு அவர் கூறும்போது, மாநகராட்சி வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் வனத்துறை உதவியுடன் 670 மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.

    இதையடுத்து மாநகராட்சி நீச்சல்குளத்துக்கு சென்ற மேயர் அங்குள்ள நீச்சல்குளத்தில் தண்ணீரை அடிக்கடி சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி ஆணையர்கள் பழனிச்சாமி, முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai