Enable Javscript for better performance
மாவட்ட நீதிபதிகள் 23 பேர் நியமனம்: போலீஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட நீதிபதிகள் 23 பேர் நியமனம்: போலீஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட நீதிபதிகள் 23 பேர் நியமனம் தொடர்பான போலீஸ் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

     மதுரையைச் சேர்ந்த கே.கதிரேசன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகளாக 2013 ஆம் ஆண்டு 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது விண்ணப்பங்கள் மற்றும் போலீஸ் அறிக்கை நகல்களை அளிக்கக் கோரி தகவலறியும் சட்டத்தில் 2014 நவ.11 இல் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு (நிர்வாகம்) விண்ணப்பித்தேன். அவர் தகவல் அளிக்கவில்லை. இதனால் பதிவாளர் ஜெனரலிடம் மேல்முறையீடு செய்தேன். அதில் நடவடிக்கை இல்லாததால் மாநிலத் தகவல் ஆணையருக்கு மேல்முறையீடு செய்தேன். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தகவலறியும் உரிமைச்சட்டத்தை இந்த அதிகாரிகள் மதிக்கவில்லை. இந்நிலையில், நீதிபதிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கிய, பொதுத்துறை தகவல் அதிகாரியிடம் 2014 நவ.25-இல் தகவல் கோரி விண்ணப்பித்தேன். அவர் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற இணைப் பதிவாளருக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் நடவடிக்கை இல்லை. சட்டப்படியான பணி செய்வதில் இருந்து தவறியுள்ளனர். எனவே மாநிலத்தகவல் ஆணையருக்கு அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் தகவல் அளிக்க மறுத்த பதிவாளர் (நிர்வாகம்) மீது நடவடிக்கை எடுக்க பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

     இவ்வழக்கில் தமிழக உள்துறை செயலரை (நீதிமன்றங்கள்) எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், 23 மாவட்ட நீதிபதிகளின் விண்ணப்ப நகல்கள், போலீஸ் விசாரணை அறிக்கைகள் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai