Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை இயந்திரத்தை பழுதுபார்க்க முன்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

       திருமங்கலம் அருகேயுள்ள மாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(24). இவர் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே சிலிப்பர் கட்டை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வியாழக்கிழமை அதிகாலை பணியில் இருந்தபோது, நிறுவனத்தில் பழுதான இயந்திரம் ஒன்றை சரிசெய்ய முன்றாராம். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜசேகரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai