Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் பறிப்பு வழக்கில் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே மோட்டார் சைக்கிள் பறிக்கப்பட்ட புகாரில் ஒருவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     மதுரை மணிநகரம் ராஜாமில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது நண்பர் உசிலம்பட்டியைச் சேர்ந்த கீர்த்தனன் என்ற கீதன் (24). இருவரும் கடந்த 14-ஆம் தேதி சந்தோஷின் நிறுவன மோட்டார் சைக்கிளில் நகரிக்குச் சென்றுள்ளனர். அங்கு கீர்த்தனின் மற்றொரு நண்பரும் சேர்ந்துள்ளார். மூவரும் இரவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர்.  நாகமலைப்புதுகோட்டை பகுதியில் வந்தபோது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தோஷை தாக்கிவிட்டு மற்றவர்கள் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துச்சென்றதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் கீர்த்தனனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai