Enable Javscript for better performance
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை கோரும் மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை கோரும் மனு தள்ளுபடி

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

     மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் சாந்தகுமரேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ். மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

     மனு விவரம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. அவை வெளியில் வந்தால்தான் நீதி கிடைக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், இவ்வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என கூறியுள்ளார். மேலும், சிபிஐ புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த கார்த்திகேயன், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

      எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறுபடியும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

     இம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை கோரிய மனுவை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

     எனவே அதே கோரிக்கையுடன் கூடிய மனுவை விசாரிக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரர் விரும்பினால் உச்சநீதிமன்றத்தை அணுகி தேவையான பரிகாரம் பெறலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai