Enable Javscript for better performance
லோக் ஆயுக்தா நிறுவக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதில்- Dinamani

சுடச்சுட

    

    லோக் ஆயுக்தா நிறுவக்கோரும் வழக்கு: தமிழக அரசு பதில்

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு பிறகு லோக் ஆயுக்தா நிறுவப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்தது.

     மத்திய அரசு 2013 இல் நிறைவேற்றிய சட்டப்படி தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைப்பை நிறுவ உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளதாகவும்,திருத்தம் கொண்டு வந்த பிறகு லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், சட்ட திருத்தத்துக்குப் பிறகு மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் எனக்கூறி மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர். லோக் ஆயுக்தா நிறுவக்கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai