Enable Javscript for better performance
வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: பத்துக்கும் மேற்பட்டோர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

    By மேலூர்  |   Published on : 17th April 2015 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் புறவழிச்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் லாரி, மினி லாரி, சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்தது. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

      மதுரையிலிருந்து சென்னைக்கு தனியார் சுற்றுலாப்பேருந்து, புதன்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது. மேலூர் நான்குவழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றதில் லாரி மீது மோதி நான்குவழிச்சாலை தடுப்புச்சுவரைத் உடைத்துக்கொண்டு எதிர்பக்கம் பாய்ந்தது. அப்போது, எதிர்திசையில் திருச்சியிலிருந்து மதுரைக்கு மணல் ஏற்றிவந்துகொண்டிருந்த லாரிமீது சுற்றுலாப்பபேருந்து மோதி கவிழ்ந்தது.

    இதில் ஓட்டுநர் கலையரசன் (40), மாற்று ஓட்டுநர் பாண்டியராஜன் (40) மற்றும் பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர். பேருந்து மோதியதில் லாரியும் கவிழ்ந்தது.  அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று கவிழ்ந்த லாரி மீது மோதி அதுவும் கவிழந்தது. இதில் லாரியிலிருந்த பிஸ்கட் பெட்டிகள் சாலையில் சிதறின. மூன்று வாகனங்களும் நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்து கிடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவலிறிந்த மேலூர் போக்குவரத்து போலீஸார், கொட்டும் மழையில் கிரேன் உதவியுடன் 3 வாகனங்களையும் மீட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai