சுடச்சுட

  

  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஓதுவார் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை

  By மதுரை  |   Published on : 03rd December 2015 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2015-16 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

  இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா. நடராஜன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு கடந்த 2013-14 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளியில் தற்போது 2015-16 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே, தகுதியான மாணவர்கள் இதில் சேரலாம். ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 13 வயது நிரம்பியவராகவும், 20 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். நல்ல குரல் வளமும், உடல் வளமும் பெற்றிருத்தல் வேண்டும். சமய தீட்சை பெற்றவராக இருத்தல் வேண்டும். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு இலவசமாக உணவு, உறைவிடம், சீருடையுடன் பயிற்சிக்கால உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். இவை அனைத்தும் திருக்கோயில் நிதியிலிருந்தே அளிக்கப்படுகிறது.

   மூன்றாண்டு கால சான்றிதழ் பயிற்சி, திருக்கோயில் ஓதுவார் பணிக்குத் தகுதியானதாகக் கருதப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை-1, தொலைபேசி-0452-2344360. இ-மெயில், இணையதளம் ஆகியவற்றிலும் விவரங்களை அறியலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai