Enable Javscript for better performance
இறுதி ஊர்வலத்தில் மோதல்: 5 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து- Dinamani

சுடச்சுட

    

    இறுதி ஊர்வலத்தில் மோதல்: 5 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து

    By மதுரை  |   Published on : 27th January 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே இறுதி ஊர்வலத்தில் நடந்த மோதல் தொடர்பாக 5 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்யது.

    மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் 1997-ல் இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டிக்கேட்ட பிரச்னையில் தென்னரசு என்பவர் தாக்கப்பட்டார். இது தொடர்பாக செல்வம் உள்ளிட்ட 5 பேரை ஊமச்சிகுளம் போலீஸார் கைது செய்தனர் இவ்வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் 5 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து 5 பேரும் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், வழக்கில் போலீஸார் முறையான விசாரணை நடத்தவில்லை. தாக்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொருள்களை கைப்பற்றவில்லை. மேலும் வழக்கில் 5 ஆண்டுகள் கழித்தே போலீஸார் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டது.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணா, இவ்வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து போலீஸார் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai