Enable Javscript for better performance
மதுரை: குற்ற வழக்கில் 25 நாளில் 45 பேர் கைது ரூ.30 லட்சம் மதிப்புபொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை: குற்ற வழக்கில் 25 நாளில் 45 பேர் கைது ரூ.30 லட்சம் மதிப்புபொருள்கள் பறிமுதல்

    By மதுரை  |   Published on : 27th January 2015 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை நகரில் குற்ற வழக்குகள் தொடர்பாக கடந்த 25 நாள்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகை உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.உமையாள் தலைமையில் சிறப்பு விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணை அடிப்படையில் 65 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 45 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 25 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இரு சக்கர வாகனங்களைத் திருடி, அதில் சென்று பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்றது தெரியவந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிலையில் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே விட்டுச்சென்றதும் தெரியவந்தது.

    வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் கைதானவர்களில் 12 பேர் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் என்பதும், அவர்கள் முதன்முறையாக போலீஸாரிடம் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து பெற்றோர் கவனிப்பின்றி இடையிலே படிப்பை கைவிட்ட நிலையில் சமூக விரோதிக்கும்பலிடம் சேர்ந்து சிறார்கள் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    குற்ற வழக்குகளில் கைதானவர்களில் சிக்கந்தர்சாவடி ரவி (28), மற்றும் காளிதாசன், ரவிச்சந்திரன், ராஜசேகர் ஆகியோர் ஏராளமான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

    ரவி மீது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். பல வழக்கில் வாரண்ட் உள்ளது.மதுரையில் 10 சம்பவங்களில் ரவி மீது வழக்குகள் உள்ளது. கைதாகும் நிலையில் உடனடியாக ரவி ஜாமீனில் விடுதலையாவதால் அவரைக் கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது என்கிறார்கள் போலீஸார்.

    குற்றச் சம்பவங்களில் கைதானவர்களில் அந்தோணிராஜ், வெங்கடேஷ்ராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர் போலீஸ் உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

    கைதானவர்களிடமிருந்து 25 மோட்டார் சைக்கிள்கள் உள்பட ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    தீவிர விசாரணை: மேல அனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனியில் சத்தியநாராயணன் என்பவர் வீட்டில் மர்மநபர்கள் 53 பவுன் நகையைத் திருடியுள்ளனர். இதுகுறித்து மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் உமையாளிடம் கேட்டபோது, தீவிர விசாரணை நடந்துவருகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து பொருள்கள் மீட்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai