Enable Javscript for better performance
அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    வாடிப்பட்டி, ஜன. 27:  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே  அனுமதியின்றி கற்கள் ஏற்றிவந்த  2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

      வாடிப்பட்டி தாலுகாவில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் தாசில்தார் இராம.குமார் தலைமையில் வருவாய்த்துறையினர்  ரோந்துசென்றனர்.

     அதிகாலையில் பாலமேடு அருகே இராஜாக்கள்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த 2 டிராக்டர்களை நிறுத்தினர். அப்போது அந்த டிராக்டர்களை ஓட்டி வந்த ஓட்டுநர்களும், உடன் வந்தவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

     அந்த டிராக்டர்களில் அனுமதியின்றி கற்கள் ஏற்றிவந்தது தெரியவந்தது.

       இதையடுத்து அந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் கொண்டுவந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai