Enable Javscript for better performance
அழகிரி ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை, ஜன.27:  அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாகவும், பிளக்ஸ் போர்டுகள் வைத்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்துள்ளனர்.

      வரும் 30 -ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் மதுரையில் கொண்டாட உள்ளனர். இதையடுத்து கடந்த சில நாள்களாகவே மு.க.அழகிரியை வாழ்த்தியும், திமுக தலைமையை விமரிசித்தும் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

     இந்நிலையில் திங்கள்கிழமை அழகிரி ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சிக்காக மதுரை பைபாஸ் சாலையில் மு.க.அழகிரியை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. 

     உரிய அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியும், போக்குவரத்துக்கு இடையூராக பிளக்ஸ் போர்டுகள் வைத்ததாகவும் பாலதம்புராஜ் மற்றும் திமுக முன்னாள் கவுன்சிலரும், 75 வது வட்ட நிர்வாகியுமான குட்டி என்ற பொன்னிருள், அழகிரி ஆதரவாளர்கள் கண்ணன், செந்தில் ஆகியோர் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai