Enable Javscript for better performance
உதவுவதுபோல நடித்து தங்கநகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை, ஜன. 27: உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவது போல நடித்து தங்கநகை திருடியவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

    மதுரை அனுப்பானடி மீனாட்சி முதல் தெருவைச் சேர்ந்தவர் மைதிலி (42). இவரது தந்தை உடல் நலமின்றி உள்ளார். அவரை ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவ்வழியே சென்ற ஆட்டோவை அழைத்துள்ளார். ஆட்டோவில் வந்த 3 பேர் மைதிலியின் தந்தையை தூக்கி உதவியுள்ளனர். அவர்கள் சென்ற நிலையில், மைதிலியின் தந்தை அணிந்திருந்த தங்கத்தாலான ருத்ராட்சம், மோதிரம் ஆகியவற்றைக் காணவில்லை. காணாமல் போன நகைகளின் மதிப்பு நாலரைப் பவுன் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தெப்பக்குளம் காவல் நிலையத்தில் மைதிலி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai