Enable Javscript for better performance
ஊரக விளையாட்டு போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    வாடிப்பட்டி, ஜன. 27:   மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கிராம அளவிலான ஊரக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து, ஒட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

      விளையாட்டு போட்டிகளுக்கு ஊராட்சித் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.

      வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

      விழாவில் ஊராட்சி துணைத் தலைவர் ரெங்கதுரை, செயலர் முருகேஸ்வரி, பள்ளியின் தலைமையாசிரியர் இளமாறன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai