Enable Javscript for better performance
காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் முதன்முறையாக இன்று ஆன்லைன் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் முதன்முறையாக இன்று ஆன்லைன் தேர்வு

    By மதுரை  |   Published on : 28th January 2015 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை, ஜன.27: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் பயிலும் முதுநிலை மாணவர்கள் முதன்முறையாக புதன்கிழமை (ஜன.28) ஆன்லைனில் தேர்வு எழுத உள்ளனர்.

     மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் 2014 ஜனவரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னனு வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண், ரகசிய குறியீட்டு எண் கொண்டு பாடங்களை ஆன்லைனில் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும். இதன் அடுத்தகட்டமாக, ஆன்லைன் தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

     மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுக்கான காலவிரயத்தைத் தவிர்க்கும் வகையில்இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்வுத் திட்டத்தின்படி, 40 மதிப்பெண்களுக்கு 40 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 30 மதிப்பெண்களுக்கு மூன்று வினாக்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் விடையளிக்க வேண்டும். எஞ்சிய 30 மதிப்பெண்களுக்கு தனிமுறைப்பணியாக (அசைன்மெண்ட்), எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.

     தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் 14 சி மற்றும் 14 ஏ வரிசை இளங்கலை மற்றும் முதுநிலை முதல் தொகுதி மாணவர்களுக்கான தேர்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இதற்கென தமிழகத்தில் 19 தேர்வு மையங்களும், பிற மாநிலங்களில் 37 துணைத் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆன்லைனில் முதுநிலை மாணவர்கள் 4 ஆயிரம் பேரும், தேர்வுத்தாள் வழியாக இளங்கலை மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

     தேர்வாணையர் பி.விஜயன், கூடுதல் தேர்வாணையர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai