Enable Javscript for better performance
குடியரசு தினம்: விடுமுறை அளிக்காத 80 நிறுவனங்கள் மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினம்: விடுமுறை அளிக்காத 80 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    By மதுரை  |   Published on : 28th January 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை, ஜன.27: பொதுவிடுமுறை நாளன்று தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கான படிவத்தை அனுப்பாத 80 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    தேசிய விடுமுறை நாள்களில் கடைகள், ஹோட்டல்கள், போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

     அவ்வாறு இல்லையெனில், பணிக்கு வரும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.

    அதுகுறித்த விவரத்தை உரிய படிவங்களில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் விடுமுறை நாளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.

    குடியரசுத் தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்களா என மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (பொறுப்பு) மு.சரோஜினிதேவி தலைமையிலான அலுவலர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஊழியர்களைப் பணியில் அமர்த்தியிருந்த நிலையில், முறையான படிவம் சமர்பிக்காத 53 கடைகள், 21 ஹோட்டல்கள், 6 போக்குவரத்து நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai