Enable Javscript for better performance
தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் வார்டுகள்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் வார்டுகள்

    By மதுரை  |   Published on : 28th January 2015 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை, ஜன. 27: மதுரை மாநகராட்சிப் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கு ஜன.28 முதல் பிப்.2 வரை புகைப்படும் எடுக்கும் வார்டுகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆணையர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

     மதுரை மாநகராட்சி வார்டு எண்.21, 22 பெத்தானியாபுரம், கோச்சடைப் பகுதிகளுக்கு மண்டலம் எண் 1 அலுவலகத்திலும், வார்டு எண் 8, 5, விளாங்குடி, பீ.பீ.குளம் ஆகிய பகுதிகளுக்கு மண்டலம் எண். 2 ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள புதிய அலுவலகத்திலும் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படும்.

     வார்டு எண் 67, 68, 74, 73 மஞ்சணக்காரத் தெரு, திரெளபதியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மண்டலம் எண் 3 அலுவலகத்திலும் புகைப்படம் எடுக்கலாம். வார்டு எண் 89, 90 ஜெய்ஹிந்துபுரம், வீரகாளியம்மன் கோயில் பகுதிகளுக்கு மண்டலம் எண் 4 இல் உள்ள நிரந்தர மையத்தில் புகைப்படம் பதிவு செய்யும் முகாம் நடைபெறும்.

     இதேபோல மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட வார்டு எண் 62, 60, 59, 61  கதிர்வேலன் நகர், அவனியாபுரம், மீனாட்சி நகர், வில்லாபுரம் புதுநகர் பகுதிக்கு அவனியாபுரம் பழைய நகராட்சி அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

     வார்டு எண் 3, 4, 2,1 ஆனையூர், சம்பந்தர் ஆலங்குளம், கூடல்நகர், சாந்திநகர் மற்றும் விளாங்குடி பகுதிகளுக்கு ஆனையூர் பழைய நகராட்சி அலுவலகத்திலும், வார்டு எண்.95, 96 மன்னர் கல்லூரி, தியாகராசர் காலனி, புதுக்குளம் 2 பிட், திருப்பரங்குன்றம், பாலாஜிநகர், கைத்தறிநகர், திருநகர், ஹார்விபட்டி பகுதிகளுக்கு திருப்பரங்குன்றம் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் புகைப்படம் பதிவு செய்யும் பணி நடைபெறும்.

     இதில் 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் குடியிருந்த பகுதியில் குடும்ப உறுப்பினர்கள் கணக்கெடுப்பு பதிவாகி இருக்கும். அந்த பதிவை வைத்துக்கொண்டு தற்போது எங்கு குடியிருந்தாலும் ஏற்கனவே பதிவு செய்த வார்டு பகுதியில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

    மேலும் தற்போது குடியிருக்கும் இருப்பிடத்திற்கான ஆவணச்சான்று கொடுத்து முகவரியை மாற்றமும் செய்து கொள்ளலாம்.

     வார்டு வாரியாக புகைப்படம் பதிவு செய்யும் தேதி அந்தந்த மையங்களில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பதிவுகள் பதிவு செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். புகைப்படம் எடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். செவ்வாய்கிழமை விடுமுறை எனவும் மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai