Enable Javscript for better performance
நில விற்பனையில் மோசடி புகார்: தந்தை, மகன்கள் மீது வழக்கு - Dinamani

சுடச்சுட

    

    நில விற்பனையில் மோசடி புகார்: தந்தை, மகன்கள் மீது வழக்கு

    By மதுரை  |   Published on : 28th January 2015 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை, ஜன.27: நில விற்பனையில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தந்தை, மகன்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

     மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (58). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரிடம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்த கருப்பையா தனக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள 5 சென்ட் நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு பவர் எழுதித்தந்துள்ளார். இந்நிலையில் 11.07.2014-ல் பவரை ரத்து செய்த கருப்பையா, பின்னர் 19.07.2014-ல் நிலத்தின் பத்திரம் தொலைந்ததாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

     புகாரின் அடிப்படையில் பத்திரத்தின் நகலைப் பெற்றவர் அதை வைத்து தனது மகனுக்கு நிலத்தை எழுதிக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தையும் தராமல், நிலத்தின் பவரையும் மாற்றியதை அறிந்த சுப்பிரமணி, மதுரை மாநகர் போலீஸ் துணை ஆணையரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் கருப்பையா, அவரது மகன்கள் செல்லகுமார், கோபிநாத் ஆகியோர் மீது சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai