Enable Javscript for better performance
புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கு  பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையை அடுத்த நரசிங்கம் கிராமத்தில் கட்டப்படும் மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

     மதுரை கிழக்கு வட்டத்துக்கான தாற்காலிக அலுவலகம் ஒத்தக்கடையில் ஒரு திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. நரசிங்கம் கிராமத்தில் இரண்டரை ஏக்கரில் ரூ. ரூ.2.02 கோடியில் நிரந்தர அலுவலகம் கட்டப்படுகிறது.

    இரண்டு தளங்களுடன் அமையும் இக் கட்டடத்துக்கு அண்மையில் பூமி பூஜை நடைபெற்றது. மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தமிழரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வேலுச்சாமி, கிழக்கு வட்டாட்சியர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai