Enable Javscript for better performance
பெரியாறு கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியாறு கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

    By வாடிப்பட்டி  |   Published on : 28th January 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாடிப்பட்டி, ஜன. 27:   மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டியில் பெரியாறு பாசனக் கால்வாய் உள்ளது. இதன் இரு கரைகளிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகளை பொதுப்பணித்துறையினர் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

     இது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் விதியின் படி முறையாக முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு செல்லக்கவுண்டன்பட்டி செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும்போது வாடிப்பட்டி தாசில்தார் ராம்குமார், சாத்தையாறு அணை உதவி பொறியாளர் மொக்கமாயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலங்காநல்லூர் போலீஸார் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai