Enable Javscript for better performance
456 மதுபாட்டில்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை, ஜன. 27:   மதுரை நகரில் திங்கள்கிழமை (குடியரசு தினம்) விதிமீறி விற்கப்பட்ட 456 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை நகரில் குடியரசு தினத்தன்று மதுக்கடைகள் அடைக்கப்படவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நகரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் கோயில் அருகே மது விற்றதாக முத்து, ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 22 மதுபாட்டில்கள், ரூ.120 ரொக்கமும், தெற்குவாசல் தவிட்டுச் சந்தைப் பகுதியில் முருகன் என்பவரை கைது செய்து 410 மதுபாட்டில்களும், ரூ.1110 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.

    அண்ணாநகர் பகுதியில் சிந்தாமணியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் 26 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக மேலும் 4 பேரைத் தேடிவருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai