Enable Javscript for better performance
அதானி குழுமத்துக்கு நிலம் விற்பனை: விசாரணை கோரி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அதானி குழுமத்துக்கு நிலம் விற்பனை: விசாரணை கோரி வழக்கு

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பாக அதானி குழுமத்துடன் நடந்த நிலப்பறிமாற்றங்களை ரத்து செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     வழக்குரைஞர் ஆர்.தேவரிஷி இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 4000 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின் சக்தி ஆலை நிறுவப்பட்டு 648 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் மின்சாரத்தை தமிழக அரசு யூனிட் ரூ.7.01 என்ற விலைக்கு வாங்கிக்கொள்ளும். இந்த திட்டத்துக்காக கமுதி, செங்கப்படை, புதுக்கோட்டை, எம்.கரிசல்குளம், முதல்நாடு ஆகிய 5 இடங்களில் 300 ஏக்கர் நிலம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

     கையகப்படுத்தும் நிலத்துக்கு ஈடாக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நிலப்பறிமாற்றம் தொடர்பான பணிகள் இரவு நேரங்களில் நடக்கிறது. சிலரது நிலம் அவர்களுக்குத் தெரியாமலேயே விற்பனை செய்யப்பட்டு உள்ளது. சில நில உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென காணாமல் போயுள்ளனர். மாவட்ட நிர்வாகம், பதிவுத்துறை, காவல்துறை கூட்டாக செயல்பட்டு நில உரிமையாளர்களை ஏமாற்றியும் நிர்பந்தம் செய்தும் நிலங்களை அதானி குழுமத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளன. எனவே ராமாநாதபுரம் மாவட்டத்த்தில் அதானி குழுமம் நிலம் வாங்கியது தொடர்பான அனைத்து விற்பனை ஆவணங்களயும் ரத்து செய்து, அதுகுறித்து விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai