Enable Javscript for better performance
ஊதிய உயர்வு கோரி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதிய உயர்வு கோரி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மாநகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர்கள் முனியாண்டி(எல்.பி.எஃப்), எம்.பாலசுப்பிரமணியன்(சி.ஐ.டி.யு), ஏ.போஸ்(எல்.எல்.எஃப்) உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

    இந்தப் போராட்டம் குறித்து சிஐடியு பொதுச்செயலர் எம்.பாலசுப்பிரமணியன் கூறியது: தொடர்ந்து பல ஆண்டுகளாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதற்குரிய நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இப்பிரச்னையில் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார். போராட்டத்தின்போது மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தற்போது வழங்கப்படும் ரூ.115 ஊதியத்தை அரசு நிர்ணயித்த தொகையான 225 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    போராட்டம் தொடர்ந்து நீடித்ததையடுத்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) இ.சாந்தி, நகர பொறியாளர் அ.மதுரம் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினர். இதில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai