Enable Javscript for better performance
எஸ்ஐ தேர்வு நிபந்தனையை எதிர்த்து 12 பெண்கள் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்ஐ தேர்வு நிபந்தனையை எதிர்த்து 12 பெண்கள் வழக்கு

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சார்பு ஆய்வாளர்களுக்கான உடல்தகுதித்தேர்வு நிபந்தனையை எதிர்த்து 12 பெண்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

     மதுரையைச் சேர்ந்த மாரீஸ்வரி,முத்துமலர்செல்வி உள்ளிட்ட 12 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான பொதுப்பிரிவில் எழுத்துத்தேர்வுக்குப்பின் உடல் தகுதித்தேர்வில் பங்கேற்க 70க்கு 42 என கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. நாங்கள் 42 மதிப்பெண்ணுக்கு கூடுதலாக பெற்ற போதும் நாங்கள் உடல்தகுதித் தேர்வில் நிராகரிக்கப்பட்டோம். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஸடார் (6 மதிப்பெண்) பெற வேண்டும் என்ற புதிய நிபந்தனை மற்றும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு உடல் தகுதிக்கான கட்ஆப் மதிப்பெண்ணை 41 இல் இருந்து 32 ஆக குறைப்பு ஆகிய புதிய நடைமுறைகளால் பாதிப்பு ஏற்பட்டது. மதிப்பெண் குறைப்பால் எங்களை விட மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்ற பலர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

    எனவே சட்டவிரோதமான புதிய விதிமுறைகளை ரத்து செய்து எங்களை நேர்மொழித்தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இம்மனு நீதிபதி டி.ராஜா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai