Enable Javscript for better performance
காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தார்.

     மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மாம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ரவி(45). விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம் போல்  தனது வயலில் விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகே புதரில் மறைந்திருந்த காட்டுபன்றி ரவியை தாக்கியது. இதில் ரவி பலத்த காயமடைந்தார். இவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரவியை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருமங்கலம் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai