Enable Javscript for better performance
சேடபட்டி அருகே வயிற்றுப் போக்கு: 23 பேர் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேடபட்டி அருகே வயிற்றுப் போக்கு: 23 பேர் பாதிப்பு

    By பேரையூர்  |   Published on : 01st September 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேடபட்டி அருகே வாந்தி வயிற்றுப் போக்கு காரணமாக 23 பேர் பாதிப்படைந்தனர். இதனால் அக்கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்தில் உள்ளது குப்பல்நத்தம். இந்தக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதில்  கண்ணாமணி (60), மலைச்சாமி (45), விமலா (30), ஆவுடையம்மாள் (70), செல்லம்மாள் (70), சுந்தர் (28) உள்பட 23 பேர் பாதிப்படைந்தனர். இவர்கள் அனைவருக்கும் சேடபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

     பின்னர்  விமலா, ஆவுடையம்மாள், மாரியம்மாள் ஆகிய மூவரும் தீவிர சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் காலையில் மாரியம்மாள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேரையூர் வட்டாட்சியர் சிவராமன், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் முருகன், பக்கீர்முகமது மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வருவாய்துறையினர் அங்கு சென்று  குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

     மேலும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில் மேற்பார்வையில், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai