Enable Javscript for better performance
திருப்பரங்குன்றத்தில் இடத்தகராறில் பெண் உள்பட 4 பேருக்கு வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் இடத்தகராறில் பெண் உள்பட 4 பேருக்கு வெட்டு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 01st September 2015 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தில் இடத்தகராறு காரணமாக பெண் உள்பட 4 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். 

     திருப்பரங்குன்றம் தேவி நகரை அடுத்த நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்லபாண்டி(32). கட்டடத் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாரிமுத்து (30). ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் தொலைநிலைக் கல்வியாக எல்.எல்.பி படித்து வருகிறார். இருவீட்டாருக்கும் ஏற்கெனவே இடப்பிரச்னை இருந்து வந்தநிலையில் திங்கள்கிழமை மதியம் மாரிமுத்து 20 பேர் கொண்ட கும்பலுடன் செல்லப்பாண்டியை தேடிவந்துள்ளார். அப்போது செல்லப்பாண்டி அருகில் உள்ள உறவினர் போஸ் என்பவரது வீட்டில் இருந்தாராம்.

     இதையறிந்த கும்பல் போஸ் வீட்டிற்கு சென்று செல்லப்பாண்டியை அரிவாளால் வெட்டினர். அதனை தடுக்க முயன்ற போஸ், அவரது மனைவி சுந்தரி மற்றும் அவரது மகன் ஜெகதீஸ்குமார் ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 4 பேரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பிச்சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai