Enable Javscript for better performance
தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

     சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்னாள் பெண் ஊழியர் வளர்மதி தொடுத்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் 5ஆவது நாளாக திங்கள்கிழமை கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியது:

      அரசியல் கருத்துக்களை கூறுகையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தேவையற்ற வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும். அதை முன்கூட்டியே அறிவிக்க இயலாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். கடந்த சில நாள்களாக வலுவிழந்து காணப்படும் மது விலக்கு போராட்டம் விரைவில் பழைய நிலைக்குத் திரும்பும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai