Enable Javscript for better performance
தொழிலதிபர் வீட்டில்  65 பவுன் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் தொழிலதிபர் வீட்டில் 65 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

    மதுரை கூடல்நகர் பகுதி சொக்கலிங்கநகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (47). தொழிலதிபர். இவர் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு ராசிபுரம் சென்றுள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.  வீட்டுக்குள் பூஜை அறையிலிருந்து பீரோ திறக்கப்பட்டிருந்தது. பொருள்கள் சிதறிக்கிடந்தன. வீட்டுக்குள்ளிருந்த 65 பவுன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.   தகவலறிந்த கூடல்புதூர் குற்றப்பிரிவு போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். மதுரையில் கடந்த ஒரு வாரத்தில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளை உடைத்து மர்மநபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai