நகை, செல்போன் திருடிய இருவர் பிடிபட்டனர்
By மதுரை | Published on : 01st September 2015 07:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மதுரையில் நகை மற்றும் செல்போன் திருடிய 2 இளைஞர்கள் பிடிபட்டனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அன்பு நகரைச்சேர்ந்த பிரபாகரன்(42). தனது மனைவியுடன் சுகுணா ஸ்டோர் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் பிரபாகரன் மனைவியிடம் நகையை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது அவரை பொதுக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஆண்டார் கொட்டாரத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் எனத் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
அதே பகுதியில் அண்ணாநகரைச் சேர்ந்த என்.பிரகதீஷ் என்பவரது செல்போனை திருடிய போது மற்றொரு இளைஞர் பிடிபட்டார். விசாரணையில் அவர் அனுப்பானடியைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரியவந்தது. அவரையும் போலீஸார் கைது செய்தனர்.