Enable Javscript for better performance
பெண் தற்கொலை: கணவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிழக்குதெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சுமதி(27). இவர்  ஒருங்கிணைந்த ஜவுளிபூங்காவில் வேலைசெய்துவந்தார்.

    அப்போது அவருடன் வேலைசெய்த கச்சைகட்டி பெரியார் நகரை சேர்ந்த சுப்பையா மகன் மைக்கேல்ராஜா(25) என்பவரை ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து, வாடிப்பட்டியில் தனிக்குடிதனம் நடத்திவந்தார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் மனமுடைந்த சுமதி  28ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து சுமதியின் தந்தை அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai